ஏழை கையில் ஆட்சிச் சரடு

மதுரை பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியை வீடு. அவரது குழந்தை தரையில் ஊர்ந்து முன்னே செல்ல முயல்வதைக் கவனிக்கிறேன்.
குழந்தை தன் இரு கைகளை முன்னே தலைக்குமுன் தரையில் நீட்டி தரையில் வலுவாக அழுத்திப் பிடிக்கிறது. அந்த பிடியின் ஆதாரமாக கொண்டு, தன் வயிரு மற்றும் உடம்பு முழுவதையும் முன்னே செலுத்துகிறது. அக்குழந்தை. ஒர் இடதிலிருந்து இன்னொரு இடத்திற்கு இப்படி முன்னேறுகிறது.
சற்று நேரத்திற்குப் பிறகு, குழந்தையின் பாட்டி, குழந்தையின் உடம்பு முழுவதும், குளிப்பாட்டுவதற்குத் தயாரிப்பாக எண்ணை பூசித் தடவி குழந்தையை மீண்டும் தரையில் விடுகிறார்.
குழந்தை மீண்டும் ஊர்ந்து முன்னேற முயல்கிறது. கைகளை முன்னே நீட்டுகிறது. தரையில் அழுத்தி ஒரு "பிடி" யைத் தேடுகிறது. பிடி கிட்டுவதாக இல்லை. கைகள் வழுகி விடுகின்றன. குழந்தை முன்னே செல்ல முடிவதாக இல்லை. பிடி வேண்டும்.
பிடி வேண்டும்
அக் குழந்தை, மக்கள் சமூகத்துக்கு அடையாளம். மக்கள் சமூகம் என்னும் உடல், the body of people, முன்னேற வேண்டும் என்றால் அதற்க்கும் ஆற்றல் வய்ந்த ஒரு பிடி தேவை. முன்னேற்றமான காரியங்களுக்கு, சமூதாயத்தை இயக்க வேண்டும் என்றாலும் அடிமட்ட மனிதனுக்கு தேவையானது இந்த "பிடி" அதுவும் ஆற்றல் வாய்ந்த "பிடி" ஆக இருக்க வேண்டும்.
வலு வேண்டும்
ஆற்றல், சமூதாய மாற்றத்தில் மிக மிக முக்கியமான ஒன்று. தெருவோரத்தில் திருவாளர் " அ " உட்கார்ந்து இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம். திருவாளர் "இ" அவர் அருகே வந்து எந்தக் காரணமும் இன்றி, ஓங்கி அவர் கன்னத்தில் அறைகிறார்.
என்ன நடக்கும்?
மிகப் பலர் சொல்வார்கள். "அவர் தீரும்ப அடிப்பார்" என்று. எனக்கு நிச்சயம் இல்லை. "ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டு" என்கிற அருள் அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளாதவராக இருந்தால் கூட, அவர் தீரும்பி அடிப்பார் என்பது நிச்சயம் இல்லை.
எப்போதுதான் தீருப்பி அடிப்பார் என்று எதிர்ப்பாக்கலாம்?. திருப்பி அடிப்பதற்கான வலு - ஆற்றல் - அவரிடம் இருக்கும்போது. அந்த ஆற்றல் இருந்தால், அவருக்குப் போய் ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தி. "ஏப்பா நீ அடிப்பட்டிருக்கிறாய்" உனது உரிமை மீறப்பட்டிருக்கிறாது, நீ அவமதிக்கப்பட்டிருக்கிறாய், நீ பதில் செயலாக்கத்தில் ஈடுபட வேண்டிய தருணம் இது". என்றெல்லாம் உசுப்பி விடத் தேவையில்லை.
இயல்பகவே அவரிடமிருந்து எதிர்செயலாக்கம் வரும். ஏனென்றால், தன் உரிமையை, மாண்பை, எதிர்காலத்தை நிலை நாட்டுவது என்பது ஒவ்வொரு மனிதனின் இரத்தத்திலேயே உள்ள ஒன்று. மீறல் கண்டால் இரத்தமும் அத்தனை நாடிகளும் கொதிக்கும்.
அந்த ஆற்றல் அவரிடம் இல்லையென்று வைத்துக் கொள்வோம். எத்தனைதான் கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்று நடத்தினாலும் அவர் திரும்பி அடிக்கப்போவது இல்லை. அவருக்குள் கசப்புணர்வுகள்தான் மிஞ்சும். அவருக்கு இரத்த அழுத்தம், வயிற்றுப் புண் என வெவ்வேறு நோய்கள் வருவதுதான் மிச்சம்.
இன்று திருவாளர் அடிமட்டமனிதன் வெவ்வேறு வகைகளில் பாதிக்கப்படுகிறார். அவருக்கு விடுபட வழி? அவர் யாரை நம்ப?
யாரையும் நம்பிப் பயன் இல்லை. அவருடைய பிரச்சினைகள் தீர அவரைத் தவிர அதிக அக்கரை யாருக்கும் இருக்க முடியாது.
அடித்தள மக்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் அவர்களைத் தவிர அதிக ஆர்வம் யாருக்கும் இருக்க முடியாது.
அவர்களுக்கு மட்டும் ஆற்றல் இருந்தால் அவர்களது பிரச்சினைகள் தீரும்.
பாவம், அவர்கள்! மதவாதிகள், கட்சிவாதிகள், சமூகவாதிகள் எனப் பலரை நம்பி ஏமாந்து போய் இருப்பவர்கள் அவர்கள். அவர்களுக்கு தங்களையே நம்புகிற அளவுக்கு ஆற்றல் எப்போது வரும்?
சரி, ஆற்றல் என்றால் என்ன?
இதற்க்கு வெவ்வேறு பதில்கள் வெவ்வேறு கோணங்களிலிருந்து வரும்.

Copyright © 2010 Neighbourhood Community Network. All rights reserved.

Designed by Prabhu International